Saturday 19 July 2014

கவிதை

கவிதைத் துளிகள்

நிலம்

விளை விப்பவன்
இன்றி...
வீணாய்கிடக்கிறேன்...

விளைய நான் ரெடி...
விளைவிக்க
நீங்கள் ரெடியா...?




வினை

மரம் வளர்த்தாய்
மழை வந்தது...
வா...வா..
எனும் முன்னாள்...!

மரம் வெட்டினாய்
மழை போனது...
டா...டா... என்றது...!

வினைவிதைத்தாய் - தமிழுக்கு
தெரிந்து போனது
மழைக்கு கூட -
ஆங்கிலம்.


வலி

துடித்ததால்...
உகுந்தன...
கண்ணீர் பூக்கள்...!!!

உன் -
வார்த்தையின்
வலிமையை...

விழிகள்...
எனக்காய் -
சாட்சி சொன்னன...!


ஓட்டம்

போட்டி வைத்தேன்
நிற்கவில்லை
கடிகார முட்கள்...
ஓடிக் கொண்டேயிருந்தன...!

அப்பா...
நின்றேன் நான்
நின்றன முட்கள்
செயல் இழந்த செல்களால்...!


நீர் துகள்கள்

செயற்கை மழையில்
நனைந்தேன்...

சிறு ஆனந்தம்...ஆம்...!!!
ஸ்நான அறையில்...!








1 comment:

  1. உங்கள் ஷசொந்த நடை கவிதையா???

    ReplyDelete