Thursday, 24 July 2014

கிருஷ்ண கானம்

பாடல்


கண்ணன் வரும் பொழுது தெரியாது
களவாட வெண்ணெய் உறிமீது
விடிகால வேளையில் செய்து வைத்தேன்
வீதியெல்லாம் கோலம் போட்டு வைத்தேன்         கண்ணன்

நறுமண சாம்பிராணி புகை போட்டேன்
நறுமணம் கமழும் மாலை தொடுத்தேன்
நெய்யில் பலகாரம் செய்து வைத்தேன்
நெய்தீம் விடிய ஏற்றி வைத்தேன்                   கண்ணன்

வந்தானடி அவனும் சிரித்துக் கொண்டு
வாயெல்லாம் வெண்ணெய் அப்பிக் கொண்டு
உண்டானடி பலகாரம் ரசித்துக் கொண்டு
அம்மாவென்று அழைத்தான் மகிழ்ச்சி கொண்டு     கண்ணன்

ஓடி விளயாட அழைத்தானடி
ஓயாமல் தொடர்ந்தான் தாவிதாவி
கண்ணாமூச்சி யாட  அடம்பிடித்து
காணாமல் போனான் மாயக்கண்ணன்              கண்ணன்

விழிப்புடன் இல்லாததால் விடியுமுன்னே
விண்ணுலகம் சென்றான் வான்வீதியில்
கண்கள் பூக்க காத்திருந்தேன்
கனவில் அம்மாவென்றழைப்பை கேட்டிருந்தேன்.   கண்ணன்





5 comments:

  1. இதமான சாரல்கள் தளத்தையும் தொடர்கிறேன்...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. வணக்கம்!

    கண்ணன் கழலிணை காட்டும் கவிபடித்தால்
    உண்ணும் உணவேன் உரை?

    கவிஞர் கி. பாரதிதாசன்
    தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
  3. இதமான சாரல்கள் - பெயர் மிகவும் இதமாக இருக்கிறது.

    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. தங்கள் கிருஷ்ண கானம்
    எங்கள் உள்ளம் இனிக்கும்
    இனிய கானம்

    ReplyDelete
  5. உங்கள் கிருஷ்ண கானம் ... என்னை தமிழ் இசையில் காணாமல் போக செய்து விட்டன

    ReplyDelete